நடக்க முடியாத நிலையில் சமந்தா! வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் நாக சைதன்யா வெளியிட்ட புகைப்படம்
நடிகை சமந்தா அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் இருக்கும் நிலையில், அவரது முன்னாள் கணவர் பிரபல நடிகையுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா நாக சைதன்யா
முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா திடீரென தனக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்த நிலையில், ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சமந்தா வீட்டில் நடக்க முடியாமல் ஓய்வு எடுத்து வருகின்றார்.
இத்தருணத்தில் நடிகர் நாக சைதன்யா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
வேறொரு நடிகையுடன் டேட்டிங்கா?
சமந்தா நாகசைதன்யா பிரிந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், நடிகர் நாக சைதன்யா நடிகை சோபித்த துளிபாலாவுடன் வெளிநாட்டிற்கு டேட்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சோபிதா பொன்னியின் செல்வன் படத்தில், வானதி கதாபாத்திரத்தில், அதாவது அருண் மொழி வர்மனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.