இதெல்லாம் எப்படி நடக்குது? விவகாரத்து பிரச்சினைக்கு சமந்தா லைவ் வீடியோவில் வைத்த முற்றுப்புள்ளி!
கடந்த சில நாட்களாகவே நடிகை சமந்தாவும், கணவர் நாகசைதன்யாவும் விவகாரத்து தகவலானது பெரிய சர்ச்சையாகவே சென்று கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி, இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் நீங்கள் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு இடம் மாற போறீங்களா என கேள்வி எழுப்ப, அதற்கு சமந்தாவும், கண்டிப்பாக கிடையாது.
நான் ஹைதாராபாத்திலேயே தான் இருக்க போறேன் எதுனால இந்த மாறி வதந்திகள் பரவுகிறது தெரியலை. எல்லாமே பொய் தான் எனக்கூறி இருக்கிறார். இதனால் சமந்தா கூறிய இந்த வார்த்தையால் விவகாரத்து தகவல் பொய் என நிரூபணமாக தெரிகிறது என கூறி வருகின்றனர்.