சமந்தாவுக்கும், எனக்கும் இடையே என்ன உறவு? நாக சைதன்யாவிற்கே தெரியும்! பிரபல ஆடை வடிவமைப்பாளர் விளக்கம்
நடிகை சமந்தாவிற்கும், தனக்கும் என்ன சம்பந்தம்? என்பதற்கு ப்ரீத்தம் ஜுகல்கர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாக ஜோடி 4 ஆண்டு திருமண வாழ்க்கையினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முறித்துக்கொள்வதாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
இதற்கான காரணம் பல கூறிவந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் அதற்கான விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கருடன் நெருக்கமே இதற்கு முக்கிய காரணம் என்று இன்னும் கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆடை வடிவமைப்பாளர் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், நாக சைதன்யா அமைதியாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. சமந்தா எனக்கு அக்கா போன்றவர்.
அவரை நான் ஜிஜி என்று தான் அழைப்பேன் என்றும் வட இந்தியாவில் ஜிஜி என்றால் சகோதரி என்று அர்த்தம்... இவ்வாறு இருக்கையில் எங்களுக்குள் எப்படி தொடர்பு ஏற்படும்.
எனக்கு சைதன்யாவை ஆண்டுக்கணக்கில் தெரியும். மேலும் சமந்தாவிற்கும், தனக்கும் இடையே என்ன உறவு என்பதை நன்றாக தெரிந்திருந்தும், எங்கள் இருவரையும் சேர்த்து வைத்து பேச வேண்டாம் என்று நாக சைதன்யா கூறியிருக்கலாம் அல்லது ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம்.
இதனால் என்னை திட்டி சமூக வலைதளங்களில் கமெண்ட் போடுவதால், மனதளவில் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
