நடிகை சமந்தாவா இது? ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு வாங்கிய சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்த உடன் நடிகை சமந்தா மிக வேகமாக சினிமாவில் படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட் திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார்.
விவாகரத்துக்கு பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தீவிரம் காட்டி வரும், சமந்தா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் படமான புஷ்பா படத்தில், ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
மேலும், இந்த ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட சமந்தா சுமார் 1.5 கோடி சம்பவம் வாங்கியுள்ளாராம். அதிலும் இந்த பாடலில் கவர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில், காட்டி இருக்கிறார் இதனால் ரசிகர்கள் வாயடைத்துபோய் இருக்கின்றனர்.