சமந்தாவை அழவைத்து சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்! நள்ளிரவில் நடந்தது என்ன?
நடிகை சமந்தா சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்கு பிரபல நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது காதல் கணவரை பிரிந்தார்.
அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.
பேத்தியை வரவேற்க தாத்தா செய்த காரியம்! வைரலான விவசாயி
நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்நிலையில், சமீபத்தில் சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், விஜய் தேவரகொண்டா செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
VD11 படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து போலியாக ஒரு காட்சியை எழுதி, அதற்கு ஒத்திகையில், அதெல்லாம் பொய் என்று தெரியாமல் நள்ளிரவு நிஜமாகவே நடித்துக் கொண்டிருந்தார் சமந்தா.
அதற்கு விஜய் தேவரகொண்டாவோ ஹேப்பி பர்த்டே சமந்தா என சொல்லவே, மொத்த படக்குழுவும் ஹேப்பி பர்த்டே சமந்தா என வாழ்த்தியது, கேக் வெட்டி கொண்டாடியது என சமந்தா கண் கலங்கிவிட்டார்.
லண்டனில் இருந்து வாட்ஸ் அப்பில் வந்த ஒரு புகைப்படம்! லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தமிழர்.