விமான நிலையத்தில் வெளுத்து வாங்கிய சமந்தா! தீயாய் பரவும் காணொளி
நடிகை சமந்தா விமான நிலையத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தனது காதல் கணவரை பிரிந்தார். இதனை பெரிதும் எடுத்துக்கொள்ளாத சமந்தா தனது கவனத்தினை வேறு பக்கம் திருப்பி வருகின்றார்.
அண்மையில் புஷ்பா திரைப்படத்திற்காக சமந்தா நடனம் ஆடிய பாடல் மிகவும் பிரபலமானது. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
இந்த பாடலில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வந்தார். ஓ சொல்றியா மாமா.. ஓஓ ஓஓ சொல்றியா .. என்கிற, கேளிக்கை விடுதியில் பெண் ஒருவர் ஆடும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட குத்துப் பாடலில் சமந்தா மாறுபட்ட தோற்றத்தில் வந்து அசர வைத்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் அரபிக் குத்து என்கிற முதல் சிங்கிள் பாடல் வைரலாகி வருகிறது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி உருவான இந்தப் பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது.
இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.