ரசிகர் கூறிய ஒற்றை வார்த்தை! கடுப்பிலும் ஹார்ட் கொடுத்து சரியான பதிலடி கொடுத்த சமந்தா
நடிகை சமந்தாவின் அழகைக் குறித்து ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், கடுப்பில் சமந்தா அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கிலும் உச்ச நட்சத்திரமாக காணப்படுகின்றார். நடிகை சமந்தா மயோசிடிஷ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
இவர் கடைசியாக நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் யசோதா படத்தின் புரமோஷனின் போது தான் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டதைக் வெளியே கூறினார்.
ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு கடுமையான உடல்வலியினால் அவதிப்பட்ட சமந்தா கண்ணீருடன் கஷ்டத்தினை பகிர்ந்திருந்தார்.
வெளிநாட்டில் சிகிச்சைக்கு சென்ற சமந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை திரும்பி வந்தார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகியதோடு, தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற சகுந்தலம் ட்ரெய்லர் வெளியீட்டின் போதும் உருக்கமாக பேசி கண்ணீர் சிந்தினார்.
அழகைப் பற்றி ரசிகர் கூறியது என்ன?
இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கருத்தைப் பார்த்து கடுப்பாகிய சமந்தா அதற்கு பதில் கொடுத்துள்ளார். ஆம் சமந்தாவின் தற்போதைய புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன் ஒருவர், சமந்தாவைப் பார்த்து வருத்தப்படுவதாகவும், அழகையும் குளோவையும் இழந்துவிட்டதாகவும், விவாகரத்துக்கு பின்பு மிகவும் துணிச்சலாக இருந்தவரை மயோசிடிஸ் நோயின் தாக்கத்தினால் மீண்டும் பலவீனம் ஆக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
இதனை அவதானித்த நடிகை சமந்தா அவருக்கு பதில் கொடுத்துள்ளார். தனது டுவிட்டர் ரீடிவிட் செய்த சமந்தா, நான் பல மாதங்கள் சிகிச்சை பெற்று மருந்துகளை எடுத்துக்கொண்டது போல் உங்களுக்கும் நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன்...
மேலும் உங்கள் குளோவை அதிகரிக்க என்னிடமிருந்து சில அன்பு உங்களுக்கு என்று குறிப்பிட்டு ஒரு ஹார்ட்டின் ஈமோஜியை ஷேர் செய்துள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ஸ்டே ஸ்ட்ராங், நிச்சயம் மீண்டு வருவீர்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர்.