குறைந்த விலையில் அழகான கிராமத்தையே வாங்கிய பணக்காரர்! விலை எவ்வளவு தெரியுமா?
ஸ்பெயின் நாட்டில் உள்ள சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமத்தினை சுமார் 2 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பணக்காரர் வாங்கியுள்ளார்.
இந்த விடயம் உலகத்தினையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சால்டோ டி காஸ்ட்ரோ கிராமம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
ஸ்பெயின் நாட்டில் மக்களால் கைவிடப்பட்ட ஆள் இல்லாத கிராமம் தான் இது.
அழகான கிராமத்தையே வாங்கிய பணக்காரர்!
ஸ்பெயின் நாட்டில் ஜமோரா மாகாணத்தில் போர்ச்சுகல் எல்லைக்கு அருகே சால்டோ டி காஸ்ட்ரோ கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் 44 வீடுகள், ஒரு பள்ளிக்கூடம், ஒரு தேவாலயம், ஒரு ஹோட்டல், நீச்சள் குளம் ஆகியவை உள்ளன.
1980களில் இருந்து இப்போது வரை இந்த கிராமம் கைவிடப்பட்டதாகவே இருக்கிறது.
இந்த கிராமத்தை விலைக்கு வாங்கிய அதன் தற்போதைய உரிமையாளர், கிராமத்தை புதுப்பித்து சுற்றுலா தலமாக மாற்றிவிடலாம் என திட்டமிட்டு வாங்கியுள்ளார்.
மிகக் குறைந்த விலைக்கு ஒரு கிராமமே இருந்தாலும் இதனை மீண்டும் புனரமைக்க அதிக பணம் செலவாகும் என்றும் தெரிகிறது.