பிடிவாதம் செய்த பிரபல நடிகர்! பிக்பாஸ் தொகுப்பாளரை மாற்றிய பிரபல ரிவி
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை தொகுத்து வழங்கிய பிரபல நடிகர் வரமறுத்ததால் தொகுப்பாளரை பிரபல ரிவி மாற்றியுள்ளது.
பிக்பாஸ்
முதன்முதலாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, பின்பு பல மொழிகளில் பல சேனல்களால் நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இந்நிகழ்ச்சி 5 சீசன்கள் மட்டுமே முடிந்துள்ளன. ஆனால் இந்தியில் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துவிட்டன.
இந்தியில் இதுவரை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிலையில் 16வது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எத்தனை கோடி கொடுத்தாலும் வேண்டாம்
கடந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. அவருக்கு கடந்த சீசன் இந்த அளவுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகும் முடிவில் இருந்த அவரை அதிக சம்பளம் கொடுத்து வளைத்துபோட்டது பிக்பாஸ் குழு.
இந்த முறை பிக்பாஸ் குழு 16-வது சீசனை தொகுத்து வழங்க அழைத்தபோது, தான் வரவில்லை என மறுத்தாராம். ஆனால் அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விடாமல் துரத்தியதால் ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் தான் தொகுத்து வழங்குவேன் என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இதற்கும் சம்மதம் தெரிவித்த பிக்பாஸ் குழுவிற்கு, சல்மான் கான் அதிர்ச்சி கொடுத்துள்ளாராம். ஆம் தன்னால் வரமுடியாது என்று கூறியதால், வேறு தொகுப்பாளரை களமிறக்க திட்டமிட்டு வருகின்றனர். பிரபல இந்தி இயக்குனர் ரோகித் ஷெட்டியிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.