சல்மான் கான் மேடையில் போட்ட ஆட்டம்...இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? இந்த அசிங்கம் தேவையா?
பாலிவுட்டில் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சல்மான் கானின் மேடை டான்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோ DubaiExpo2020 என்ற விழாவில் பதிவு எடுக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சல்மான் கான், அவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கிக் படத்தின் Jumme Ki Raat என்ற பாடலுக்கு பீஸ்ட் பட நாயகியான பூஜா ஹெக்டேவுடன் நடனமாடினார். .
கிக் படத்தில் வரும் Jumme Ki Raat பாடலுக்கு நாயகி ஜாக்குலின் பெர்னான்டஸ் உடன் சல்மான் கான் நடனமாடி இருப்பார்.
When #SalmanKhan Tries to make the impossible Dance Step possible with #PoojaHegde ♡ Da-DanggTheTourReloaded@BeingSalmanKhan @hegdepooja pic.twitter.com/O67PXz9ZyS
— Salman Sajid Bhai Jaan (@SalmanSajidBha6) February 26, 2022
அதில் மிகச் சிறப்பான ஸ்டெப்ஸ்களையும் அவர் போட்டிருப்பார். பாடலில் ஒரு பகுதியில் அவர் நடிகை ஜாக்குலி அணிந்திருக்கும் ஸ்கர்ட்டை அவரது பல்லால் கடித்துக்கொண்டு ஆடுவது போல் இருக்கும்.
இதேபோன்று, துபாயில் நடந்த நிகழ்ச்சியிலும் பூஜா ஹெக்டே உடன் ஆட முயற்சி செய்தார் சல்மான். ஆனால், பூஜா அவருக்கு இசைவு கொடுக்காமல் அப்படியே நகர்ந்து சென்றுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வரும் இணைய வாசிகள் சல்மான் கானை பயங்கரமாய் கலாய்த்து வருகின்றனர்.