பிக்பாஸில் அதிரடியாக மாற்றப்பட்ட தொகுப்பாளர்! பிரபல நடிகருக்கு நடந்தது என்ன?
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் சல்மான் கான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு பதில் கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
சல்மான் கான்
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் சல்மான் கான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 16 ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.
தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் ஷோ முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பானது. வார இறுதி எபிசோடுகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் சிகிச்சையில் இருந்து வரும் சல்மான் கானுக்கு பதிலாக யார் தொகுத்து வழங்க உள்ளார் என்ற கேள்வி அதிகமாக ரசிகர்களிடையே எழுந்தது.
கரண் ஜோஹர்
தற்போது பிரபலங்களை பேட்டி காண்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட நபராக மாறிய கரண் ஜோஹர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.
பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக பாலிவுட்டில் வலம் வரும் இவர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பலரையும் பேட்டி எடுத்ததன் மூலம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் அறிமுகம் ஆகிவிட்டார்.
எந்த கேள்விகளுக்கும் அஞ்சாத கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கலர்ஸ் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.