இனி வாய்ப்பே இல்லையா? கணவரை பிரிந்த பின் சைந்தவி செய்த செயல்!
பாடகி சைந்தவி இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்த கணவரின் பெயரை நீக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் ஜி.வி. பிரகாஷ் குமார்.
இவர் பள்ளித் தோழியான பாடகி சைந்தவி காதலித்து கடந்த கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் காதல் ஜோடிகளாக இசை பயணத்தில் இணைந்து சாதித்தவர்கள் தான் ஜி.வி.
பிரகாஷ் - சைந்தவி. ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை.
சைந்தவி செய்த செயல்
இந்த நிலையில் இருவரும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தங்களின் விவாகரத்தை அறிவித்திருந்தனர்.
இது தொடர்பான அறிக்கைகளும் வெளியிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து, சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைந்தவி பிரகாஷ் என்கிற பெயரை சைந்தவி என மாற்றியுள்ளார்.
இருவரும் சேர்வார்கள் என எதிர்பார்த்த வேளையில், சைந்தவியின் இந்த அதிரடி எக்ஷன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |