சாய் பல்லவி வீட்டில் கூடிய விரைவில் விஷேசம்: காதலனை அறிமுகம் செய்த தங்கை-அதிர்ச்சியில் ரசிகர்கள்
சாய் பல்லவியின் தங்கை- பூஜா, தன்னுடைய காதலன் குறித்த பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாய் பல்லவி
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் இந்தியாவில் கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்டவர்.
மேலும் பிரபல டிவியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீடியாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து “பிரேமம்” திரைப்படத்தில் மலர் ரீச்சராக சினிமாவிற்குள் அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பு, நலினம் கொண்ட நடனம் இப்படி இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
சினிமாவில் கவர்ச்சி காட்டி பிரபலமாகும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டும் நடிகையாக சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
காதலன் யார் தெரியுமா?
இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கையின் காதலன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சாய் பல்லவியை போல் அவரின் தங்கையும் ஒரு நடிகை தான். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான “சித்திரை செவ்வானம்” என்ற படத்தின் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பட வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை. இதனால் தற்போது சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியிருக்கிறார்.
ஆனாலும் அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தன்னுடைய காதலனுடன் இருக்கும் நெகிழ்ச்சியாக தருணங்களை ஒன்றிணைத்து வீடியோக்காட்சியொன்றை வெளியிட்டுள்ளார்.
சாய் பல்லவி தன்னுடைய வருங்கால கணவரை அறிமுகம் செய்வார் என எதிர்பார்த்த நிலையில் பூஜா இப்படி செய்தது பிரபலங்கள் உட்பட ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், “ அக்காவை விட தங்கச்சி ரொம்ப பாஸ்ட்டா இருக்காங்களே?...” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |