குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்குமா? கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது 6 அல்லது 7 மாதங்களில் குங்குமப்பூ சாப்பிடுவார்கள்.
பாலில் கலந்து குடிப்பதால் பிறக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என பலரும் நம்புகிறார்.
ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் எதுவும் வெளியாகவில்லை.
இருந்தாலும் குங்குமப்பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் குங்குமப்பூ பால் தொடர்ந்து குடிப்பதால் குழந்தை கலராக பிறக்காது. ஆனால் கர்ப்ப காலத்தில் வேறு விதமான பலன்களை கொடுக்கிறது. இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
குங்குமப்பூ பால் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
1. இயற்கையாக குங்குமப்பூவிற்கு தோலின் நிறத்தை மாற்றும் குணம் இல்லை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய இருக்கின்றன. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.
2. கர்ப்ப காலத்தில் இது போன்ற உணவுகளை உட்கொள்வதால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளலாம்.
3. குங்குமப்பூ செரிமானத்தை சீர்ப்படுத்த உதவியாக இருக்கின்றது. இது கர்ப்ப காலத்தில் அடிக்கடி செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால் தான் பெரியவர்கள் குங்குமப்பூவை பாலில் அல்லது கஞ்சியில் கலந்து குடிக்க சொல்கிறார்கள்.
4. செரிமான கோளாறுவால் மலச்சிக்கல் பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. இப்படியான நேரங்களில் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கலாம்.
5. குங்குமப்பூவில் இருக்கும் ஆன்டி டிபிரெசென்ட் ஏஜென்ட்ஸ் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த செயன்முறை அம்மா மற்றும் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிச் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |