UPI-ல் பணம் பரிவர்த்தனை செய்பவர்களா? அப்போ இந்த விடயங்களை தெரிஞ்சிக்கோங்க
நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகமாகி வருவதால் யாரும் பெரிதாக கையில் பணம் வைத்து செலவு செய்வதில்லை.
அதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.
அதே சமயம், மோசடி செய்பவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்துள்ள காரணத்தினால் சைபர் மோசடிகளும் அதிகமாகி வருகின்றன.
அதிலும் குறிப்பாக யுபிஐ பயன்படுத்துபவர்களிடம் மோசடி செய்வதை சில இலக்காக வைத்திருக்கிறார்கள். இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருப்பது அவசியம்.
அப்படியாயின், மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு நிபணர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அவசியம் தெரிந்திருக்க வேண்டியவை
1. இன்று முதல் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு UPI-ஐ பயன்படுத்தி பணம் அனுப்பும் முன்னர் உங்களின் ஐடியை ஒன்றுக்கு பல முறை சரிப் பார்த்துக் கொள்வது அவசியம். இதனால் தவறான ஐடியால் பணம் இழப்பதை தவிர்க்க முடியும்.
2. UPI-யின் PIN நம்பரை உங்களை தவிர வேறு யாருக்கும் பகிர வேண்டாம். ஏனெனின் தற்போது வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி சிலர் மோசடி செய்கிறார்கள். அப்படி யாரும் கோல் செய்து விவரங்கள் கேட்டால் அதனை கொடுக்க வேண்டாம். இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்கு அடிக்கடி உங்களின் PIN நம்பரை மாற்றுவது நல்லது.
3. வாட்ஸ்அப் மூலமும் QR குறியீடு பகிரப்படுவதால் அதனை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனைகளை செய்கிறார்கள். இதனால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரியாதவர்களிடம் QR குறியீடுகளை பகிர்ந்து கொள்வது பின்னால் உங்களுக்கு ஆபத்தாக மாறலாம்.
4. பேங்க் ஸ்டேட்மென்ட்டை அவ்வப்போது சரிபார்த்து கொள்வது நல்லது. ஏனெனின் உங்களுக்கே தெரியாமல் பணம் எடுக்க வாய்ப்பு உள்ளது.
5. UPI செயலியை எப்போதும் அப்டேட்டாக வைத்து கொள்ள வேண்டும்.
6. UPI செயலியை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக உங்களுக்கு தோன்றினால் 1930 என்ற எண்ணை அழைத்து புகார் செய்யலாம். இதன் மூலம் சைபர் மோசடிகள் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |