துணியால் ஆன முக கவசத்தை பயன்படுத்தலாமா? மீறினால் என்ன நடக்கும்?
கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு நபரும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்தல் உட்பட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவவும் வலியுறுத்தப்படுகிறது, இந்நிலையில் எந்த மாதிரியான மாஸ்கை பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் மக்களிடம் இல்லாமல் இல்லை.
சர்ஜிக்கல் மாஸ்க், N 95 மாஸ்க் என பல ரகங்கள் இருந்தாலும் துணியால் ஆன மாஸ்க்கை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் கொரோனா வைரசின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் 3 அடுக்கு முககவசம் அல்லது துணியால் ஆன முககவசங்களை அணிந்தால் போதுமானது.
ஒவன் துணியால் ஆன 3 அடுக்கு முககவசம் மற்றும் என்.95 முககவசம் வைரஸ் நுழையாமல் தடுக்கும்.
3 துணி முககவசங்களை ஒருவர் வைத்துக்கொண்டால் அவற்றை துவைத்து சுழற்சிமுறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருநாள் பயன்படுத்திய முககவசத்தை துவைத்து அதை 3 நாட்கள் கழித்து மீண்டும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக முககவசத்தை முன்பகுதியில் கைகளால் தொடக்கூடாது, இது நோய் கிருமிகள் நமக்குள் எளிதில் பரவும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
முககவசத்தை கழற்றும்போது கயிற்றை பிடித்து மட்டுமே கழற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.