சமையலறையில் பிளாஸ்டிக் பலகையை பயன்படுத்துகின்றீர்களா? உஷார் மக்களே
வீட்டில் சமையலறையில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் கவனமாகவே தெரிவு செய்து வாங்குவோம். ஆனால் இவற்றினை பயன்படுத்தும் போது கவனமாகவே இருக்க வேண்டும்.
அதிலும் காய்கறி வெட்டுவதற்கு நீங்கள் பிளாஸ்டிக் வெட்டுதல் பலகையை வைத்திருந்தால் சற்று கவனமுடனே இருக்க வேண்டும். இவை சில தருணத்தில் காயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதுடன், நோய்கள் தாக்கவும் வாய்ப்பு உள்ளது.
பிளாஸ்டிக் பலகையை எவ்வாறு கையாள்வது?
பிளாஸ்டிக் பலகையில் வெட்டும் போது கத்தி நழுவி விழும் அபாயமும், பலகையும் கீழே சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கையில் காயம் ஏற்படும் நிலை ஏற்படும்.
பிளாஸ்டிக் வெட்டும் பலகையின் மேற்பகுதியை முடிந்தவரை சுத்தமாக வைத்திருந்தால், கத்தி கீழு நழுவாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் பலகைகளை வழக்கமாக வெறும் தண்ணீரில் கழுவுவதால், அவற்றை சரியாக சுத்தம் செய்ய முடியாது. சோப்பு போட்டு கழுவுவதுடன், தண்ணீரையும் வடிய வைக்கவும். எலுமிச்சை தோலை ஸ்க்ரப் அல்லது உப்பு கொண்டு தேய்ப்பது சுத்தமாக வைத்திருக்கும் கிருமிகளும் அண்டாமல் இருக்கும்.
பலகையின் கீழ் பகுதியில் சிறிய தட்டினை வைத்துக்கொண்டதால், பிளாஸ்டிக் பலகை எளிதில் நழுவி விடும். இதற்கு பதிலாக கீழே துணி, டிஷ்யூ பேப்பர், நழுவாத பாய் அல்லது ரப்பர் பிடியை பயன்படுத்தினால் நழுவாமல் கவனமாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |