”தலைவா” ரஜினிகாந்துக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்
திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு 51வது தாதா சாகேப் பால்கே விருது ஒன்றிய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறையால் அறிவிக்கப்பட்டது.
கடந்த 25ம் தேதி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரஜினிக்கு விருதை வழங்கினார்.
இதனையடுத்து ரஜினிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில், ஒரு சில நடிகர்களால் மட்டுமே அவர்களின் திரைப்படம் வெளியாகும்போதெல்லாம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.
தலைவர் ரஜினிகாந்த் அதை ஒவ்வொரு முறையும் செய்து வருகிறார். தற்போதும் தொடர்ந்து ரசிகர்களை அவரின் படங்கள் மூலம் கவர்ந்து வருகிறார். அவர் தாதா சாகேப் பால்கே விருது வாங்கியதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
There are very few actors who are able to create a ripple every time their movie releases.
— Sachin Tendulkar (@sachin_rt) October 26, 2021
Thalaiva @rajinikanth does that every single time & continues to enthral the audience with his work.
Many congratulations on receiving the #DadasahebPhalkeAward.