பரோட்டா மாஸ்டரான சாட்டை பட நடிகருக்கு திடீர் திருமணம்
சாட்டை படத்தில் கதாநாயகனாக நடித்த யுவன் தனது திருமணத்தை திடீரென நடத்தி முடித்திருக்கிறார். இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் யுவன்
இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான அஜ்மல் கான் சினிமாவுக்காக தனது பெயரை யுவன் என மாற்றிக் கொண்டார்.
கடந்த 2011ல் வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் சாட்டை படத்தில் பள்ளி மாணவனாக நடித்து பிரபலமானார்.
சினிமாவில் 15 படங்களுக்கும் மேல் நடித்தும் பெரிதாக தெரியாத யுவன் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக மாறிவிட்டதாக சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு பரோட்டா மாஸ்டராக மாறுவதற்கு காரணமே இயக்குநர் பாலா தான் என்றும், அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். ஆனால், அந்த படம் கடைசியில் ஆரம்பிக்காமல் அப்படியே நின்று விட்டது.
எங்கே போனாலும், பாலா சார் படம் என்ன ஆச்சு? என்றே கேட்க ஆரம்பித்து விட்டனர். அதன் காரணமாகவே சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்றார்.
இந்நிலையில், இவரின் திருமணத்தை திடீரென நடித்தி முடித்துள்ளார். இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
யுவனின் திருமணம்
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான விஜிபி ரெசார்ட்டில் அஜ்மல் கான் எனும் யுவன், சமீரா எனும் பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
அவரது திருமணத்துக்கு சினிமாவில் இருந்து சீமான், ரியாஸ் கான், உமா ரியாஸ், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
அஜ்மல் கான் எனும் யுவனின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |