சத்தமே இல்லாமல் வீட்டில் விசேஷம் வைத்த சச்சின்- மறுமகள் யார் தெரியுமா?
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கர்
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பேட்ஸ்மேன்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் பார்க்கப்படுகிறார்.
இவருடைய மகனும், இளம் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக பிரபலமாக உள்ளார்.
ஆனாபோதிலும் இன்னும் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகவில்லை, ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடியுள்ளார்.
இதுவரையில் ஐந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற அர்ஜுன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அர்ஜுன், கடந்த 2020–21 சீசனில் மும்பை அணிக்காக தன்னுடைய உள்நாட்டு கிரிக்கட் பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஹரியானா அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி, அதற்கு முன்பு, அவர் ஜூனியர் மட்டத்தில் மும்பை அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
மேலும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும் விளையாடியிருக்கிறார்.
நிச்சயதார்த்தம்

Fish Kuzhambu: மீன் குழம்பை எத்தனை நாள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது
இப்படி பல சிறப்புக்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் அர்ஜின் டெண்டுல்கர் பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.
இந்த விழாவில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இருப்பினும், இந்த செய்தி குறித்து இரு குடும்பத்தினரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
வருங்கால மனைவியாக வருபவர் யார்?
அர்ஜின் டெண்டுல்கரின் வருங்கால மனைவியாக வரவிருக்கும் சானியா சந்தோக் மும்பையைச் சேர்ந்த காய் குடும்பத்தின் வாரிசு ஆகும். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த இவர், 'மிஸ்டர் பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர்' என்ற செல்லப்பிராணி பராமரிப்பு பிராண்டை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
காய் குடும்பம் விருந்தோம்பல் மற்றும் உணவுத் துறைகளில் வலுவான நிலையில் உள்ளது. இன்டர்காண்டினென்டல் மெரைன் டிரைவ் ஹோட்டல், புரூக்ளின் க்ரீமரி, பாஸ்கின் ராபின்ஸ் போன்ற பிராண்டுகள் இவர்களுக்குச் சொந்தமானவையாக அறியப்பட்டுள்ளது.
இந்த செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.
Congratulations on the 💍 Arjun Tendulkar. I wish the lady luck changes your career trajectory from here on. pic.twitter.com/kneT536CQ8
— Abhishek (@vicharabhio) August 13, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |