உயிருக்கு உயிரா காதலிச்சோம்.... பிரேக் அப் செய்த கோபத்தில் காதலி செய்த காரியம்! சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி
உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணின் காதலன் திடீரென பிரேக் அப் செய்து கொண்டதால் தான் பரிசாக கொடுத்த பைக்கை கொழுத்திய சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பெண் எவ்வளவோ முயன்றும் அந்த இளைஞரைச் சமாதானம் செய்ய முடியவில்லை.
இதனால் கோபத்தில் உச்சிக்கே சென்ற அந்த பெண் தான் பரிசாக அளித்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தினார்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை என்றாலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கை தீ ஒரு பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.