அடடே! இப்படியும் ராணிகளா?
ஒரு ஆண் ஆட்சி செய்வதற்கும் பெண் ஆட்சி செய்வதற்கும் பல வித்தியாசங்கள் காணப்படலாம். என்னதான் ஆணின் ஆட்சி காணப்பட்டாலும் ஒரு பெண் ஆட்சி செய்யும்போது அது எவ்வாறு இருக்கும் என்பது சுவாரஷ்யமாக இருக்கும்.
மக்களுக்கு பிடித்தவொரு ராணியாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் மோசமான ராணியாக சில ராணிகள் இருந்திருக்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும். அவர்களைப் பற்றி பார்ப்போமா...
மேரி ஆன்டோனெட்
இவர் பிரேஞ்சு புரட்சியின் முன்னர் இறுதி ராணியாக இருந்தார். பல ஊழல்களில் தொடர்புடைய இவர், விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதில் பிரபலமானவர். பிரேஞ்சு மக்களால் ரொட்டி வாங்க முடியாத நிலையிலிருந்த போது, “அவர்கள் கேக் சாப்பிடட்டும்” என்று முட்டாள்தனமான உரையாடல்களுக்கு பெயர் பெற்றவராக விளங்கினார். இதுவே பிரேஞ்சு புரட்சியைத் தூண்டியது மட்டுமின்றி அவரது மரண தண்டனைக்கும் வழிவகுத்தது. 1774-1792 க்கு இடையில் பிரான்ஸின் ராணியாக விளங்கிய இவர் வரலாற்றில் மிக மோசமான ராணியாக விளங்கினார்.
ராணி தித்தா
காஷ்மீரை ஆண்ட இவர், தனது மூன்று பேரக் குழந்தைகளை சித்திரவதை மற்றும் மாந்திரீக முறைகளைப் பயன்படுத்தி தனது ஆட்சியில் வைத்திருந்தார். தனக்கு எதிராக திரும்பியவர்களை குடும்பத்தினர் உட்பட அனைவரையும் தூக்கிலிட்டார்.
மரியா எலியோனோரா
எலியோனோரா ஸ்வீடனின் ராணியாவார். தான் ஒரு மகனை பெற்றெடுக்க வேண்டுமென விரும்பினார், ஆனால் அவருக்கு மகள் பிறந்தாள். தனக்கு மிகவும் அசிங்கமான ஒரு மகள் கொடுக்கப்பட்டதாக எண்ணி, அவளை 'அரக்கன்' என குறிப்பிட்டு பல தடவைகள் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரது இறந்த தந்தையின் அழுகிய உடலுக்கு அருகில் தனது மகளை உறங்கச் செய்துள்ளார். வரலாற்றின் மிகவும் மோசமான கொடூரமான தாய்க்கு எலியோனோராவே உதாரணம்.
ப்ளடி மேரி
பிரிட்டனின் முதல் உண்மையான ராணி. போராட்டக்காரர்களுக்கு எதிராக யுத்தத்துக்கு உத்தரவிட்டதோடு, மதவெறிக்காக பலரை கொன்று குவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் 300 பேரை உயிருடன் எரித்துக் கொன்றார்.
வு ஜெடியன்
சீன வரலாற்றில் இவர் உச்ச அதிகாரம் கொண்ட ஒரே பெண்ணாக உள்ளார். இவர் வலுக்கட்டாயமாக பதவியை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி டாங் வம்சத்தில் பல படுகொலைகள் மேற்கொண்டதாகவும் அவருக்கு எதிராக செயற்பட்ட அவரது தாய் மற்றும் பேரக்குழந்தைகளையும் கொன்றதாகக் கூறப்படுகிறது.
ராணி ரணவலோனா
மடகஸ்காரை ஆட்சி செய்தார் ராணி ரணவலோனா. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தனது கணவருக்கு விஷம் வைத்துள்ளார். இவரை 'மடகஸ்காரின் இரத்தம் தோய்ந்த மேரி', 'பெண் கலிகுலா' என்று அழைக்கப்படுகிறார். கிறிஸ்தவத்தை கைவிட மறுத்தவர்களின் உடல் உறுப்புக்களை துண்டித்து, உயிருடன் எரிக்கப்பட்டு அல்லது குன்றிலிருந்து தூக்கியெறிய கட்டளையிட்டார்.