கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா - அதிகாரப்பூர்வமாக அறிவித்த உக்ரைன்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 8-வது நாளாக நடந்துகொண்டு வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, உக்ரைன் தெற்கு நகரான கெர்சனை ரஷியா கைப்பற்றியுள்ளதாக இங்கிலாந்து இராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த நகரின் மையப்பகுதிக்குள் ரஷிய படைகள் நகர்ந்தாலும் குறிப்பிட்ட அளவே பலன் அடைந்துள்ளன.
இந்த நகரின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக ரஷிய ராணுவ அமைச்சகமும் கூறியது. ஆனால் இந்த தகவலை கெர்சன் மேயர் மறுத்தார்.
தங்கள் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார்.
தற்போது கெர்சன் நகர் முழுவதுமாக ரஷியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.