ஒரே நாளில் ரஷ்யாவில் உயர்ந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்க காரணம் என்ன?
கொரோனா வைரஸ் ஆனது உலக அளவில் பரவி முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய முதல், ரஷ்யாவில் தற்போது தொடர்ந்து கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த, தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே ரஷ்யாவில் புதிதாக 40,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 85,13,790 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,158 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையில், ரஷ்யாவில் பல மாதங்களாக ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுவரை குறைவான சதவிகித மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாக அந்நாட்டு அரசுத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.