மீண்டும் உருவெடுத்த கொரோனா... ஒரே நாளில் ரஷ்யாவில் 828 பேர் பலி!
கொரோனா மூன்றாவது அலையானது தற்போது பல நாடுகளில் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,18,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் அமெரிக்காவில் 1,911 பேர் ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும், உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,13,41,291; உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,41,387; உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20,79,87,089.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,710 ஆக பதிவாகி இருக்கிறது.
மேலும் இங்கிலாந்தில் ஒரே நாளில் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்துக்கு அடுத்ததாக இந்தியாவில் 31,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனிடையே, ரஷ்யாவில் 21,438 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியாகி ஒரே நாளில் 828 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.