சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி அலைகள்: கணிப்பு பலித்து விட்டதா?
ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரையில் ஏற்பட்ட ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர், கம்சட்கா தீபகற்பத்தில் சுமார் 13 அடி (4 மீட்டர்) உயரமான சுனாமி அலைகள் தாக்கியுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரையில் இன்று 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி அருகே, 19 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஹவாய், அலாஸ்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரஷ்ய சுனாமியின் கடலலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது, 2011க்குப் பிறகு ரஷ்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். இதற்கான காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
NOW - Tsunami waves hit Russian coast along Severo-Kurilsk. pic.twitter.com/1cxuFHohVL
— Disclose.tv (@disclosetv) July 30, 2025
பாபா வங்காவின் கணிப்பு பலித்ததா?
ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி, 1999ஆம் ஆண்டு வெளியிட்ட தனது புத்தகம் *"The Future I Saw"*ல், ஜூலை 5ஆம் தேதி தெற்கு ஜப்பான் கடல் பகுதிகளில் அமைதி குலையும் என குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கணிப்புக்கேற்ப, ஜூலை மாதம் ஜப்பானை மீண்டும் ஒரு நிலநடுக்கம் தாக்கும் என எதிர்பார்ப்பு உருவாக, சுற்றுலா முன்பதிவுகள் பெரிதும் குறைந்துள்ளன.
முக்கியமாக, அவர் குறிப்பிட்ட 5ஆம் தேதி பெரிய நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றாலும், அன்றைய சுனாமி அலைகள், அவரது கணிப்பை ஒட்டியதாகக் கருதப்படுவதால், பலரை வியக்கச் செய்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
