Rusk Halwa: வாயில் வைத்ததும் கரையும் ரஸ்க் அல்வா
அல்வா என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது, நெய் மிதக்க மிதக்க பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் அல்வாவை யாருக்குத்தான் பிடிக்காது.
இந்த பதிவில் மிகவும் எளிதாக ரஸ்கை கொண்டு செய்யக்கூடிய அல்வா ரெசிபியை தான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
ரஸ்க் - 200 கிராம்
பால் - 300 மில்லி
சர்க்கரை - கால் கிலோ
நெய் - கால் லிட்டர்
முந்திரி பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை
அல்வா செய்வதற்கு முதலில் ரஸ்கை தூள் தூளாக்கி வைக்கவும், கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றவும், பால் சூடானதும் ரஸ்க் துண்டுகளை சேர்க்கவும்.
கட்டிகள் சேராமல் கிண்டிக்கொண்டே இருக்கவும், ரஸ்க் நன்றாக வெந்ததும் அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்க்கவும்.
ரஸ்க், சர்க்கரை நன்றாக பாலுடன் கலந்த பின்னர், கடைசியாக நெய்யை சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு கிளறிவிடுங்கள், நெய் பிரிந்து வரும் வரை அல்வா பதத்திற்கு வரும்வரை கிளற வேண்டும்.
கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள், கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரி பருப்பை சேர்க்கவும், பொன்னிறமாக வந்ததும் அல்வாவில் சேர்த்தால் அவ்வளவு தான் சுவையான ரஸ்க் அல்வா தயார்!!!