ஆத்தாடி இவ்வளவு பெரிய ரொட்டியா? வீடியோவை கண்டு திகைத்துபோன நெட்டிசன்கள்
இணையத்தில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா டிவிட்டரில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், நீளமான உருளையில் ஒருவர் பிரம்மாண்ட ருமாலி ரொட்டிகளை தேய்த்து போடுகிறார். அவை வெந்ததும் தனியாக எடுக்கிறார்.
இந்த ருமாலி ரொட்டி வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த வீடியோவை இதுவரையில் 1.7 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து, ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில், என்னை உடல் எடையை குறைக்க ஒரு ரொட்டி மட்டும் எடுத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள்.
நான் இப்பொது இவரை தேடிக்கொண்டிருக்கிறேன் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
I’ve been asked to lose weight and eat only one roti.
— Harsh Goenka (@hvgoenka) June 16, 2022
Now I’m searching for him….? pic.twitter.com/SEIPuA47gP