உலகிலேயே விலை உயர்ந்த குடிநீர் பாட்டில்... இத்தனை லட்சமா? ஷாக்காகிடாதீங்க! ஏன் இவ்வளவு விலை தெரியுமா?
உலகத்தில் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டிலின் ஒன்றின் விலை ரூ.44 லட்சம் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
ஒரு தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச விலையே ரூ.20-தான். ஆனால் இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 44 லட்சம்.
சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்ட இந்த பாட்டிலுக்கு ஏன் இவ்வளவு விலை தெரியுமா?
இந்த பாட்டில் 24 கேரட் தங்கத்தால் ஆனது. பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் ஃபெர்னான்டோ அல்டமிரனோ என்பவரால் இந்த பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர் துருவங்களில் இருக்கும் பிரான்ஸ், பிஜி நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இந்த பாட்டிலில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பருகினால் அதிக உத்வேகம் கிடைக்கும். மேலும் அதிக சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவே இந்த விலைக்கு ஒரு முக்கிய காரணம்.
