பாரதி கண்ணம்மா ரோஷினி அடித்த ஜாக்போட்.. Fire விட்டு வாழ்த்தும் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு அடித்த ஜாக்போட்டை பார்த்து ரசிகர்கள் குதூகலத்துடன் வாழ்த்தி வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா ரோஷினி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி.
இந்த சீரியலில் இவரின் யதார்த்தமான நடிப்பு ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும் தன்வசப்படுத்தியது.
எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் பொழுது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி, குக் வித் கோமாளி சீசன் 3 -ல் பங்கேற்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாலும், அவருடைய சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்தார்.
இவருடைய புகைப்படங்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் புதியதொரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. மாடர்ன் உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் ரோஷினியின் புகைப்படங்கள் படு வைரலாகின.
ஜாக்போட் என்ன தெரியுமா?
இப்படி பல கஷ்டங்களை கடந்து வந்த ரோஷினி, தற்போது வெள்ளத்திரை படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். நிறம், அழகு மற்றும் பணம் ஆகியவற்றிற்கு தான் முன்னுரிமை எனக் கூறப்பட்ட வேளையில் ரோஷினிக்கு கிடைத்த வாய்ப்பு நெட்டிசன்களை வாய் அடைக்க வைத்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படத்தில் ரோஷினி நடிப்பு ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இதனால் அவருடைய படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |