பேருந்தில் பயணித்த சேவல்: கட்டணம் வசூலித்த நடத்துனர்! வைரல் காணொளி இதோ
இந்திய மாநிலமான தெலுங்கானா மாநிலத்தில் பேருந்தில் பயணித்த சேவலுக்கு பயணக்கட்டணம் வசூலித்துள்ள பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக பஸ்சில் கோழியுடன் நபர் ஒருவர் ஏறிய நிலையில், அவரிடம் நடத்துனர் கோழிக்கு டிக்கெட்டையும் கொடுத்துள்ளார்.
முதலில் உரிமையாளருக்கு மட்டும் டிக்கெட் கொடுத்த கண்டக்டர், பின்னர் கையில் துணியால் சுற்றப்பட்ட சேவல் இருப்பதை கண்டுபிடித்த நிலையில், பாதி வழியில் சென்ற போது சேவலுக்கும் டிக்கெட் கொடுத்துள்ளார்.
கோழியுடன் பயணித்தவர் முகமது அலி என்பவரிடம் நடத்துனர், பேருந்தில் உயிருடன் ஏதாவது வந்தால் டிக்கெட் வாங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
கோழிக்கறி தொடர்பாக பேருந்து நடத்துனருக்கும், அலிக்கும் இடையே நடந்த சண்டையின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தில் டிஎஸ்ஆர்டிசி கோதாவரி டிப்போ மேலாளர் வி கோதாவரி கூறுகையில், கோழிக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக விலங்குகளுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறி பயணியை கண்டக்டர் இறக்கிவிட்டிருக்கலாம்.
கோழியானது துணியில் சுற்றப்பட்டிருந்ததால் கண்டக்டரால் முதலில் கவனிக்கப்படவில்லை என்றார். எனினும், இந்த சம்பவத்தில் கவனக்குறைவாகவும், விதிகளை மீறி பயணிகளிடம் சேவல் ஏற்றுவதற்கு கட்டணம் வசூலித்ததற்காகவும் நடத்துனரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
A rooster ?is a living being. Ticket is a must to travel in RTC bus.#Telangana pic.twitter.com/XEckxd9bXL
— P Pavan (@PavanJourno) February 8, 2022