ரொனால்டோவுக்கு திருமணம்: காதலி அணிந்திருந்த வைர மோதிரத்தின் விலை இத்தனை கோடியா?
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்யவுள்ளார்.
40 வயதான ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது காதலியை திருமணம் செய்யவுள்ளார்.
ஜார்ஜினா மோதிரம் அணிந்தபடி இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட, வைரலாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு கூச்சி ஸ்டோரில் இருவரும் சந்தித்துக்கொண்ட தருணத்தில் இருந்து காதல் மலர்ந்தது.
கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஐந்து குழந்தைகள்
கடந்த 2010ம் ஆண்டு முதன்முறையாக தந்தையானார் ரொனால்டோ, தற்போது 14 வயதாகும் மகன் தந்தையை போன்றே கால்பந்து போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகிறார், இவரது தாய் யார் என்பது இதுவரை அறிவிக்கவில்லை.
2017ம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார், ஜார்ஜினா மூலம் 2017ம் ஆண்டு நவம்பரில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
2022ம் ஆண்டு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் உயிரிழந்துவிட்டார், இதனால் ரொனால்டோ தம்பதியினர் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது விலையுயர்ந்த மோதிரத்தை அணிவித்து திருமணத்தை உறுதி செய்துள்ளார் ரொனால்டோ.
விலை என்ன தெரியுமா?
ஜார்ஜினா அணிந்திருந்த வைர மோதிரம் 15 முதல் 30 காரட் வரை இருக்கும் என கூறப்படுகிறது, இதன் விலை 2 மில்லியன் முதல் 5 மில்லியன் டொலர்கள் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொனால்டோவின் சொத்துமதிப்பு 1 பில்லியன் டொலர்கள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது, அதாவது 10,000 கோடியாக இருக்கலாம்.