ரோஜா சீரியல் வில்லிக்கு நடந்த வளைகாப்பு: நெகிழ்ச்சியாய் மாறிய சந்தோஷ தருணங்கள்
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் சீரியல் ரோஜா.
இதில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நாயகியாகவும் நடித்து வருகின்றனர், இவர்களை அலறவிடும் பயங்கர வில்லியாக கலக்கி வந்தவர் அனு, அதாவது ஷாமிலி.
பல இடங்களில் ஷாமிலியின் நடிப்புக்கு கைதட்டல்கள் பறந்தன, அந்தளவுக்கு வில்லத்தனத்தால் அதிரவைத்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார், காரணம் தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷமான செய்தியை தன்னுடைய ரசிகர்களுக்கும் தெரிவித்தார்.
இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது, சொந்தபந்தங்கள் சூழ வெகு விமர்சையாக நடந்த வளைகாப்பு தொடர்பான வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் ஷாமிலி.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.