நடுரோட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி! ரோஜா சீரியலில் அரங்கேறிய சொதப்பல்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அரங்கேறிய சொதப்பல்களை குறும்படம் போட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா? என்று சீரியலில் நடிக்கும் நிஜ டாக்டரிடம் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பிரபல ரிவி சீரியல் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம். ஆம் இல்லத்தரசிகளை சீரியல் மூலம் கட்டிப்போட்டிருக்கும் பிரபல ரிவியின் தற்போது பரபரப்பாக பேசப்படும் சீரியல் ரோஜா.
இதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தில் இருந்து சிறுவயதில் பிரிந்து செல்லும் கதாநாயகி அனாதை ஆசிரமம் ஒன்றில் வளர்ந்து வருகின்றார். அதே ஆசிரமத்தில் கதாநாயகியின் வயதில் வில்லியும் வளர்ந்து வரும் நிலையில், வளர்ந்த பின்பு கதாநாயகியாக வலம்வரும் ரோஜா பணக்கார வீட்டு பெண் என்று தெரிந்ததுடன், அவருடைய அடையாள பொருட்களை எடுத்துக்கொண்டு வில்லி அனு என்ற பெயரில் வீட்டிற்கு செல்கின்றார்.
ஆனால் அதே வீட்டிற்கு ரோஜா எதிர்பாராத விதமாக மருமகளாக வரும் நிலையில், வீட்டில் அனைவரின் வெறுப்பினையும் பெறும், ரோஜா நாள் செல்ல செல்ல அனைவரையும் புரிய வைத்து தன் மீது பாசம் கொள்ள வைக்கின்றார்.
ரோஜாவிற்கும் தான் தான் இந்த வீட்டின் வாரிசு என்று தெரிந்து ஏற்றுக்கொள்ளாமல் இருந்த உறவுகள் தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
இதனை தடுப்பதற்கு வில்லி செய்த பிளானை தெரிந்து கொண்ட அர்ஜுன் போலியான துப்பாக்கி குண்டை போட்டு வில்லிக்கு தெரியாமல் கொடுத்து அனுப்புகிறார்.
முகத்தை மாத்துனது ok. இடுப்பு எப்படி வெள்ளை கலர் ஆச்சு.. இந்த ஒருவிஷயம் தான் மண்டைக்குலயே ஓடுது .jpeg https://t.co/rUvJ601Zxh pic.twitter.com/C5vRqfALwm
— கூண்டுக்கிளி (@_uvt_) January 7, 2022
வில்லி அனுவும் ரோஜாவை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்த, ரோஜா இறந்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சியில் இருந்த அனுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதற்கு பின்னே அர்ஜுன் கூறும் பிளான் மட்டுமின்றி அவர்கள் செய்த செயல்கள் தற்போது கேலி பொருளாக ஆகியுள்ளது.
ஆம் சடலமாக நடித்த ரோஜாவை எழுப்பிவிட்டு வேறு ஒரு சடலத்தினை கொண்டு வந்து ரோஜா முகமாக மாற்றம் செய்வதாக இவர்கள் செய்த செயலே சொதப்பலாக மாறியுள்ளது.
ஆம் ரோஜா மாஸ்க் சடலத்தின் முகத்தில் பொருத்தும் போது, ரோஜா முகத்திற்கு சிறிதும் ஒத்துப்போகாமல், எல்லாம் பொருத்திய பின்பு ரோஜா முகமாக மாறியதாக காட்டப்பட்டுள்ளது.
அதாவது முகமூடியை பொருத்துவதாக நாடகத்தில் போடப்பட்ட ஆக்ஷன் பின்பு உண்மையான ரோஜாவையே படுக்க வைத்து கழுத்தில் மட்டும் சில வேலைகளை செய்து போலி ரோஜாவாக சித்தரித்துள்ளனர்.
இதனை எல்லாம் ரோஜாவின் தாயாக நடித்து வரும் மருத்துவரும் நடிகையுமான ஷர்மிலா முன்பு இதெல்லாம் நடந்துள்ளதைக் கண்டு ஒரு மருத்துவர் முன்பு இவ்வாறு நடக்கலாமா என்று நெட்டிசன்கள் காணொளிகளை வெளியிட்டு விளாசி வருகின்றனர்.
Humans ஆடா நீங்க???? @DrSharmila15 மேடம் ??? pic.twitter.com/dYED0iWLcV
— விஜய் (@adi10vj) January 7, 2022