வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம்தான் செம்பருத்தி. இதில் பிரசாந்துக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகியவர்தான் நடிகை ரோஜா.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர்தான்.
சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் அதற்குப் பின் அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகின்றார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் ரோஜா அவர்கள், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல். ஏவாக பதவி வகித்து வருகின்றார்.
தற்போது கலாசாரம், சுற்றுலா மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரோஜா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால் வீக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.