பல பெண்களோடு அப்படி என்ன ? தனுஷ் விவாகரத்து குறித்து விளாசிய தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தன் திறமையால் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் தனுஷ், பல படங்களில் நடித்தும் இரு படங்களை இயக்கியும் வருகிறார்.
இதற்கிடையில் 18 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக கூறி கடந்த 2022ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர்.
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பிரிவை அறிவித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ரஜினி தரப்பு இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலளிக்கவில்லை என்ற தகவலும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களது விவாகரத்து விடயம் தொடர்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில், தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தை கையில் எடுத்துப் பேசியுள்ள அவர்,“தனுஷிடம் இந்த விஷயத்தை நேரடியாகவே கேட்கிறேன்.
பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும்? ’தனுஷ் எல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா எல்லாம் ஒரு பொம்பளையா?’ எனப் பிறர் சொல்லும் அளவுக்கு ஏன் வாழ வேண்டும்? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூட நீங்கள் யோசிக்கவில்லையா? அவர்களுக்காக சேர்ந்து வாழுங்கள்” என்று கடுமையாக பேசியுள்ளார்.
குறித்த விடயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.இதற்கு நெட்டிசன்களும் கடுமையான எதிர்ப்பையும் அதிர்ப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுவெளியில் மற்றவர்களின் தனிப்பட்ட விடயம் குறித்து பேசியது தவறு என்ற வகையில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |