பாடும் மோனாலிசா ஓவியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) செயலி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.
இது மனித முகங்களை வாயசைத்து பேசுவது போன்ற மிகை யதாரத்த வீடியோக்களை உருவாக்கி ஆச்சர்யப்படுத்துகிறது.
VASA-1 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி புகைப்படத்தில் உள்ள மனித முகங்களை பேசக்கூடிய, பாடக்கூடிய வீடியோக்களாக மாற்றுகிறது.
இந்த நிலையில், மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முதலில் மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 7 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகின்றது.
Microsoft just dropped VASA-1.
— Min Choi (@minchoi) April 18, 2024
This AI can make single image sing and talk from audio reference expressively. Similar to EMO from Alibaba
10 wild examples:
1. Mona Lisa rapping Paparazzi pic.twitter.com/LSGF3mMVnD
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |