சமையல் செய்து அசத்திய ரோபோ... அதுவும் அசைவ உணவுதானாம்
சீனாவில் ரோபோ ஒன்று சமையல் செய்து அசத்திவருவதுடன், அதிலும் அசைவ உணவான நூடுல்ஸ், கெபாப் இவற்றினை செய்து அசத்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாகியுள்ள நிலையில், ரோபோக்களின் செயல்பாடும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் ரோபோக்களை வேலைக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் ரோபோ ஒன்று சமையல் செய்து அசத்தியுள்ளது. ரோபோவின் சமையலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
அதிநவீன மனித உருவ ரோப்போக்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் சீனா முன்னணியில் உள்ளது. மனிதர்களுக்கு இணையான வேலைகளைச் செய்யும் வகையில் ரோபோக்களின் செயல் திறனை சீனா மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில் யினிங் என்ற சுற்றுலா நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில், ரோபோ ஒன்று நூடுல்ஸ், கெபாப் போன்ற உணவுகளை சமைத்து அசத்தியது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |