இறுதியாக தனது பேரனின் கைகளுடன் தன் கையை இணைத்த ரோபோ சங்கர்! வைரலாகும் காணொளி
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் இறுதியாக தனது பேரனின் கைகளுடன் தன் கையை இணைத்து 3D Casting செய்த காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
நடிகர் ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவருக்கு அறிமுகமே தேவையில்லை.
அந்தளவுக்கு அவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவர்.
இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தன் காரணமாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
வெறும் 46 வயதில் அவரின் திடீர் மறைவு குடும்பத்தினரையும், திரையுலகினரையும், அவரின் ரசிகர்களையும் மீண்டுவரவே முடியாத அளவுக்கு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரின் மறைவை தொடர்ந்து ரோபோ சங்கரின் ரசிகர்கள் இவரின் பழைய காணொளிகளை பதிவிட்டு தங்களின் துயரங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் ரோபோ சங்கர் தனது பேரனின் கைகளுடன் தன் கையை இணைத்து 3D Casting செய்த காட்சியடங்கிய காணொளி இணையத்தில் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |