ரோபோ சங்கர் மரணத்தில் மனைவியின் நடனம் - கவலை உருக்கத்தில் மகள்
ரோபோ சங்கர் மரணத்தில் அவர் மனைவி நடனமாடியது தொடர்பில் மகள் உருக்கமான சில வார்த்தைகளை கூறியுள்ளார்.
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார் என தகவல் வெளியாகி இருந்தது.
இருந்தும் பலமான சிகிச்சை இல்லை என்பதால் ரோபோ சங்கர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ரோபோ சங்கரின் மனைவி இறுதி சடங்கில் நடனமாடியது அனைவரையும் ஈர்த்து இருந்தது.
மகளின் உருக்கம்
"அவங்க டான்ஸ்லதான் அவங்களுடைய அன்பை வெளிப்படுத்துவாங்க" என்று அவரது மகள் இந்திரஜா கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “ ரோபோ சங்கர் இல்லாமல் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது கஷ்டமாக இருப்பதாக அவரின் மகள் கூறினார்.
பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், காவல்துறை அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இறுதிவரை ரோபோ சங்கருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் மனதார நன்றி கூறினார்.
ரோபோ சங்கர் விட்டுச் சென்ற கடமைகளை முடிப்போம் என்றும், அவர் சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் ரோபோ சங்கரின் மகள் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரோபோ சங்கர் எந்த இடத்தில் சிரிப்பும் நகைச்சுவையும் இருக்கிறதோ, அந்த இடத்தில் இருப்பார் என்று அவர் உருக்கமாக கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |