தலையில் மல்லிகை பூ வைக்கிறாங்க.. ரோபோ சங்கர் மனைவியின் அழுகுரல்
“தலையில் மல்லிகைப்பூ வைக்கிறாங்க சங்கரு.. வாசமாக இருக்கு பா..” என ரோபா சங்கர் மனைவி பூத உடலுக்கு முன் அழுகும் காட்சி இணையவாசிகளை கவலையடையச் செய்துள்ளது.
ரோபோ சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தன் காரணமாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் நேற்றைய தினம் ஐசியூவிற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் திடீர் மறைவு குடும்பத்தினரையும், திரையுலகினரையும், அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியின் வேதனை
இந்த நிலையில், ரோபோ சங்கர் இறந்த பின்னர் அவரின் மனைவிக்கு சில சடங்குகள் செய்கிறார்கள்.
அந்த வகையில், இன்றைய அவரின் பூத உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அப்போது ரோபோ சங்கரின் மனைவி தலையில் கடைசியாக மல்லிக்கை பூ வைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் மனைவி, “ ஏ தலையில் மல்லிகை பூ வைச்சி அலங்காரம் பண்ணுறாங்க சங்கரு.. நான் மல்லிகை பூ வைத்தால் மணக்குது சொல்லுவியே சங்கர்..” என அழுகிறார்.
மேலும், கலைமாமணி ரோபோ சங்கர் அவர்களுக்கு எமது தளத்தில் மரண அறிவித்தல் பகிரப்பட்டுள்ளது. இதனை கீழுள்ள Link- ஐ கிளிக் செய்து பார்வையிடலாம்.
மரண அறிவித்தல்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |