தனுஷுக்கு இருந்த அந்த பழக்கம் - ரகசியத்தை சொன்ன ரோபோ சங்கர்
தனுஷுக்கு இருந்த பழக்கத்தைப் பற்றி நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர்
‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் நடிகர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சியால் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
சில மாதங்களுக்கு முன்பு அதிகமான குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். இவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்தில், ராமாபுரத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் மது பழக்கத்திற்கு எதிராக பேரணியில் நடத்தினர். இதில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் மது பழக்கத்தால் தான் பட்ட துயரத்தை எடுத்துக் கூறி, இனி மதுவை யாரும் அருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
தனுஷுக்கு அந்த பழக்கம் இல்லை
இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்த ரோபோ சங்கர் தனுஷ் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், என்னிடம் ஒரு கெட்டப்பழக்கம் இருந்தது. நான் அதிகமாக மது அருந்துவேன். அந்த பழக்கம் நடிகர் தனுஷுக்கும் இருந்தது. ஆனால், இப்போது அந்தப் பழக்கம் அவரிடம் இல்லை என்றார்.