படுத்த படுக்கையாக ஐந்து மாதம்.. தற்கொலை முயற்சி! பகீர் உண்மைகளை கூறிய ரோபோ சங்கர்
சில கெட்ட பழக்கங்களினால் தன் வாழ்வில் நடந்த கொடுமையான பக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் ரோபோ சங்கர்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கர்.
படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெள்ளத்திரையிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் எடை மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்த ரோபோ சங்கரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் பல துன்பங்களை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் ரோபோ சங்கர்.
அதாவது, சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசுகையில், ஒரு சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டேன், இதனால் ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டேன்.
தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன், அந்த நேரத்தில் என்னை காப்பாற்றியது என் குடும்பம் தான்.
கோபம் அதிகமாக வந்தது, மருந்து- மாத்திரை எடுக்க மாட்டேன் என அதிகமாக சண்டை போட்டேன், வீட்டில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது.
என்னை மீட்டுக்கொண்டு வந்தது என் மனைவி தான், ஆரம்ப காலங்களில் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற நான் தவறான பழக்கங்களால் இப்படியான கஷ்டங்களை சந்தித்து விட்டேன், யாரும் தப்பான வழியில் செல்ல வேண்டும்.
உங்களுக்கு நானே முன் உதாரணம் என உருக்கமாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பல குரல்களில் மிமிக்ரி செய்து பேசிய ரோபோ சங்கரை, மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.