தவறான பாதைக்கு சென்று உயிருக்கு போராடிய தருணம்! ரோபோ ஷங்கர் மகள் ஓபன் டாக்
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தனது தந்தையின் உடல்நிலை குறித்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் ரோபோ ஷங்கர்
பிரபல ரிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தவர் தான் ரோபோ சங்கர். தனது நகைச்சுவையான பேச்சினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகின்றார்.
ஆனால் சமீபத்தில் அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம் உடல் எடையை தாறுமாறாக குறைத்து எலும்பும் தோலுமாக காணப்பட்டார்.
இதற்கு காரணம் தீய பழக்கம் என்றும் சாவின் விழிம்பிற்கு சென்று திரும்பி வந்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
மகள் இந்திரஜா கூறியது என்ன?
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தனது தந்தைக்கு கடந்த சில மாதங்களாக அதிக குடிப்பழக்கம் இருந்தது உண்மையே... அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு புத்துயிர் பெற்று வாழ்ந்து வருகின்றார்.
ஆகவே மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று கூறி அந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். ரோபோ சங்கரின் மகளுக்கும் அவரது உறவுக்காரருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |