இலங்கையில் நடந்த பார்ட்டி.. போராடிய ரோபோ சங்கர் மனைவி- இதுவரையில் வெளிவராத உண்மை
நடிகர் ரோபோ ஷங்கர் மரணத்திற்கு இலங்கையில் நடந்த விருந்து தான் காரணம் என காதல் சுகுமார் கூறிய விடயம் இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரோபோ சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தன் காரணமாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் திடீர் மறைவு குடும்பத்தினரையும், திரையுலகினரையும், அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை நடந்த பார்ட்டி
இந்த நிலையில், ரோபோ சங்கர் இறப்பு பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றது.

Ethirneechal: எதுவுமே வேண்டாம்.. தர்ஷனை அடக்கிய அன்புக்கரசி- மொத்தமாக முடியப்போகும் ஜனனியின் திட்டம்
இது குறித்து காதல் சுகுமார் பேசுகையில், “ ரோபோ சங்கர் நல்ல மனிதர். அவரை எப்போதும் மனைவியிடம் கேட்பேன், சங்கரை குடிப்பழக்கத்தில் இருந்து கொண்டு வர மனைவி பிரியங்கா பல கஷ்டங்களை அனுபவித்தார். ஆனாலும் சங்கர் கேட்காமல் குடி பழக்கத்தில் முழ்கியிருந்தார்.
அதே சமயம், ரோபோ சங்கருக்கு இலங்கையில் நண்பர்கள் அதிகம். படப்பிடிப்பு இல்லாவிட்டால் இலங்கை சென்று வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இலங்கை சென்று பார்ட்டியொன்றில் கலந்து கொண்டு வந்தார். அந்த பார்ட்டி தான் இவரின் உயிர் பிரிவதற்கு காரணம்..” என கூறியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |