நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம்
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் தனது பேரனுக்கு நாளைய தினம் காதணி விழா நடத்த ஏற்பாடு செய்திருந்த தகவல் தகவல் தற்போது இணையத்தில் வைரவலாகி வருகின்றது.
ரோபோ சங்கர்
ரோபோ சங்கருக்கு அறிமுகமே தேவையில்லை என்றால் மிகையாகாது. அவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவராக வலம்வருகின்றார்.
அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து விருமன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தனது செந்த மாமனை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக தான் நோயில் இருந்து மீண்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றை தினம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வீடு தேடி வந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இறுதியாக சன் தொலைக்காட்சியில் டாப் குக்கூ டூப் குக்கூ, விஜய் தொலைக்காட்சியில், அது இது எது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் ஒரு புதிய படத்தின் பூஜையில் கூட கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோபோ ஷங்கர் மறைவால் குடும்பத்தினர் அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர். இதில் மிகப்பெரும் சோகம் என்னவென்றால் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவின் மகனுக்கு நாளை (செப்டம்பர் 20) காதணி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்குள் வீட்டில் துக்கம் நடந்துள்ளது.
