சிறப்பாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகளின் வரவேற்பு கொண்டாட்டம் யாரு யாரு வந்திருக்காங்க பாருங்க?
ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு கொண்டாட்டம் சென்னையில் சிறப்பாக நடந்தது இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்வு
தமிழ் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் என்றால் அது ரோபோ சங்கர் தான்.
இவரின் மகளான இந்திரஜாவிற்கு இனிதே திருமணம் நடந்து முடிந்த நிலையில் தற்போது இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அந்த வகையில் இந்த நிகழ்வில் கமலஹாசன், சிவ கார்த்திகேயன், விஜயசேதுபதி, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜன், ராமராஜன், தம்பி ராமய்யா,
சுரேஷ் சக்ரவர்த்தி சுப்பு பஞ்சு, செளந்தர்ராஜா, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர், இயக்குனர்கள் S. P. முத்துராமன், லிங்குசாமி, ஐசரி கணேக்ஷ் அம்பிகா, ரேகா,
அதிதி சங்கர், நளினி , திவ்யதர்க்ஷனி உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்விற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |