Baakiyalakshmi: பாக்கியாவை கட்டிப்பிடித்து கதறிய செழியன்... அடுத்த பிரச்சினை என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் செயலால் கோபி பொறாமையில் பொங்கி எழுந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ஜெனிபர் மற்றும் செழியன் இருவரையும் பாக்கியா ஒன்று சேர்த்து வைத்துள்ளார். இதனால் கோபி பாக்கியா மீது பொறாமையாக இருக்கின்றார்.
செழியன் வாழ்க்கையில் அம்மா பாக்கியாவால் ஏற்பட்ட மாற்றத்தை நினைத்து பாக்கியாவை கட்டிப்பிடித்து கதறியழுதுள்ளார். தற்போது சுமூகமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்த என்ன புயல் வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |