அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு!
மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு மிகவும் பிடித்த பாடல் என குறிப்பிட்டு, இலங்கை ராப் பாடகரும் சின்னத்திரை பிரபலமுமான வாகீசனின் முருகன் பாடலுக்கு அருமையாக பரத நாட்டியம் ஆடி, அவரது மகள் இந்திரஜா தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்தும் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருடைய தாய்மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இந்த தம்பதியினருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அண்மையில் யாரும் எதிர்பாராத வகையில், இந்திரஜாவின் தந்தையும் பிரபல காமெடி நடிகருமான ரோபோ சங்கர் காலமானார்.
இவரின் மறைவுக்கு பின்னர் இந்திரஜா அடிக்கடி தனது அப்பாவின் அழிக்க முடியாத நினைவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தன் அப்பாவுக்கு மிகவும் விருப்பமான பாடல் என குறிப்பிட்டு, வாகீசகன் பாடிய முருகன் பாடலுக்கு நாட்டியமாடி தற்போது இந்திரஜா சங்கர் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |