திடீரென மகளுடன் கமலை சந்தித்த ரோபோ சங்கர்.. என்ன விஷேசம் தெரியுமா?
நடிகர் ரோபோ சங்கர் திடீரென குடுபம்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர்.
இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரின் யதார்த்தமான நடிப்பால் இன்றும் அவர் பக்கம் பலக்கோடி ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.
தற்போது உடல் நிலை கோளாறு காரணமாக ஓய்விலிருந்து வரும் ரோபோ சங்கர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
கமல் வீட்டிற்கு சென்ற பிரபலம்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோபோ சங்கர் வாழ்க்கை நடக்கும் அத்தனை விடயங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றார்.
அந்த வகையில் மகளுக்கு திருமணம் வைத்திருக்கும் ரோபோ சங்கர் குடும்பத்துடன் சென்று கமல் அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.